கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட 10 நாடுகளில் இந்தியாவும் ஒன்று

0 2512
கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட 10 நாடுகளில் இந்தியாவும் ஒன்று

உலக அளவில் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட 10 மோசமான நாடுகளுக்குள் ஒன்றாக இந்தியாவும் முன்னேறி உள்ளது.

இந்தியாவில் 43 நாட்களில் வைரசால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 10 ஆயிரமாக இருந்தது. ஆனால் கடந்த இரு நாட்களில் மேலும் 10 ஆயிரம் பேர் பாதிக்கப்படும் அளவிற்கு நோய்த் தொற்றின் வேகம் அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்று உச்சத்தில் செல்லவில்லை என்றாலும், 7 நாட்களில் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றைய கணக்கீட்டின்படி நாடு முழுவதும் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 38 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இந்த நிலையில் 10வது இடத்தில் இருந்த துருக்கியை பின்னுக்குத் தள்ளிய இந்தியா அந்த இடத்தைப் பிடித்துள்ளது. ஏற்கனவே முதல் 3 இடங்களை முறையே அமெரிக்கா, பிரேசில் மற்றும் ரஷ்யா பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments