மகாராஷ்டிரத்தில் ஊரடங்கு மே 31ம் தேதியுடன் முடிவடைய வாய்ப்பில்லை

0 2900
மகாராஷ்டிரத்தில் மே 31ம் தேதியுடன் ஊரடங்கு முடிய வாய்ப்பில்லை என்று அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரத்தில் மே 31ம் தேதியுடன் ஊரடங்கு முடிய வாய்ப்பில்லை என்று  அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

நாட்டிலேயே கொரோனா தொற்றால் அதிகம் பாதித்த மாநிலமான மகாராஷ்டிராவில் இதுவரை 47 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மகாராஷ்டிர மக்களுக்கு ஆன்லைன் நேரலை மூலம்  முதலமைச்சர் உத்தவ் தாக்கரே உரையாற்றினார். அப்போது அவர், கொரோனா தொற்று மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்ப்பதாகவும், ஆதலால் ஊரடங்கு விலக்கி கொள்ளப்பட வாய்ப்பில்லை என்றும் குறிப்பிட்டார். 

25ம் தேதி முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்கப்படுவது குறித்து பேசிய அவர், மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரியை தொடர்பு கொண்டு, விமான போக்குவரத்தை தொடங்க மேலும் அவகாசம் கேட்டுள்ளதாக கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments