இலங்கைக்குக் கூடுதலாக 110 கோடி அமெரிக்க டாலர் கடன் வழங்குமாறு பிரதமர் மோடியிடம் கோத்தபய ராஜபக்சே கோரிக்கை

0 2200

இலங்கையின் அந்நியச் செலாவணித் தேவைக்காகக் கூடுதலாக 110 கோடி அமெரிக்க டாலர் கடனுதவி வழங்குமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பால் இலங்கையில் ஏற்றுமதி வீழ்ச்சியடைந்து அந்நியச் செலாவணிக் கையிருப்பு குறைந்தது. இதனால் அந்நியச் செலாவணிக் கையிருப்பை அதிகரிப்பதற்காக அண்மையில் இலங்கையின் மைய வங்கி, இந்திய ரிசர்வ் வங்கியிடம் 40 கோடி அமெரிக்க டாலர் கடனுதவி கோரியிருந்தது.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேசிய இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, 110 கோடி அமெரிக்க டாலர் கடனுதவி கோரியுள்ளார். அப்போது இலங்கைக்கு உதவக் கடமைப்பட்டுள்ளதாக மோடி உறுதியளித்துள்ளார். 110 கோடி அமெரிக்க டாலர் இந்திய மதிப்பில் எட்டாயிரத்து 357 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத் தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments