இந்தியா -சீனா லடாக், லே எல்லையில் தொடரும் பதற்றம்

0 3786
இந்தியா - சீனா எல்லையில் பதற்றம் அதிகரித்திருப்பதன் விளைவாக அங்கு இருநாட்டின் படைகள் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளன.

இந்தியா - சீனா எல்லையில் பதற்றம் அதிகரித்திருப்பதன் விளைவாக அங்கு இருநாட்டின் படைகள் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளன.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதில் லடாக் பகுதி அதில் ஒன்றானது. ஆனால் சீனப்படைகள் எல்லையில் அத்துமீறலில் ஈடுபட்டு வருவதால் பதற்றம் காணப்பட்டது.

எல்லையில் சீனா தனது படைபலத்தை அதிகரித்துள்ளது. இந்திய ராணுவத்துடன் உள்ள மோதல்போக்கு காரணமாக சீனா பலத்தை பிரயோகிக்க திட்டமிட்டுள்ளதால் அங்கு இந்தியாவும் படைகளை குவித்து வருகிறது. இந்தியப் படைகளின் கடும் எதிர்ப்பையும் மீறி கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் 100 கூடாரங்களை அமைத்துள்ள சீன ராணுவத்தினர் அங்கு பதுங்கு குழிகள் போன்றவற்றையும் அமைத்து ஆயுதங்களை குவித்து வைத்துள்ளனர். பதற்றத்தைத் தணிப்பதற்காக இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம். நார்வானே எல்லைப் பகுதிக்கு சென்று நிலைமையை ஆய்வு செய்தார்.

லே ராணுவத் தலைமையகத்தில் அவர் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.  இதனிடையே லடாக்கில் கடந்த வாரம் இந்திய ராணுவத்தினர் ரோந்துப் பணி மேற்கொண்ட போது அவர்களை சீனப்படையினர் சுற்றி வளைத்து சிறைபிடித்த விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது.

இதனால் இந்திய -சீன ராணுவத்தினரிடையே மோதல் வெடிக்கும் சூழல் உருவானதை தொடர்ந்து, இருதரப்பு கமாண்டர்களும் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து இந்திய வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். இப்பிரச்சினை பிரதமர் மோடியின் கவனத்துக்கும் ராணுவ அதிகாரிகளால் கொண்டு செல்லப்பட்டது .

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments