அச்சம் தரும் கொரோனா...சதத்தை தாண்டிய உயிர்ப்பலி

0 3879
தமிழகத்தில் மேலும் 759 பேருக்கு கொரோனா...பாதிப்பு எண்ணிக்கை 15,000ஐ தாண்டியது

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 759 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி, கொரோ னா பாதிப்பு 15 ஆயிரத்து 500ஐ தாண்டி உள்ளது. ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்ததால், கொரோனா உயிர்ப்பலி 103ஆக உயர்ந்துள்ளது.  

உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனாவின் பாதிப்பு, தமிழகத்தில் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.தமிழக சுகாதாரத்துறை மாலையில் வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 759 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில், வெளி நாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்பிய 49 பேரும் அடங்குவர்.

லண்டனில் இருந்து தமிழகம் திரும்பிய 7 பேருக்கும், பிலிப்பைன்ஸில் இருந்து வந்த 5 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதி ஆக, மஹாராஷ்டிராவில் இருந்து மட்டும் சொந்த ஊர் திரும்பியவர்களில் 24 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.எனவே, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15 ஆயிரத்து 512 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில், கொரோனாவுக்கு 5 பேர் உயிரிழந்ததால், பலிஎண்ணிக்கை 103 ஆக அதிகரித்துள்ளது.சென்னையில் 67 வயது ஆண் தனியார் மருத்துவமனையிலும், 75 வயது பெண் ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர்.

சென்னையை சேர்ந்த 68 வயது மற்றும் 54 வயது இரு ஆண்கள், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மரணம் அடைந்தனர்.53 வயது சென்னை ஆண் ஒருவர், ஓமந்தூரார் அரசு சிறப்பு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி, உயிரிழந்தார்.

கொரோனா பரிசோதனை ஆய்வு மையங்களின் எண்ணிக்கை 68 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் சுமார் 4 லட்சம் பேர் வரை, கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது.கொரோனாவின் பிடியில் சிக்கி இருந்தவர்களில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 363 பேர் மட்டுமே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணம் அடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 500ஐ நெருங்கி உள்ளது.

12 வயதுக்கு உட்பட்டவர்களில் 435 சிறுமிகள் உள்பட மொத்தம் 948 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.12 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்களில், 4 ஆயிரத்து 704 பெண்கள், 5 திருநங்கைகள் உள்பட மொத்தம் 13 ஆயிரத்து 286 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது.

60 வயதுக்கு மேற்பட்டவர்களை பொறுத்தவரை, 492 மூதாட்டிகள் உள்பட மொத்தம் ஆயிரத்து 278 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
மிரட்டும் கொரோனாவை தமிழகத்தில் இருந்து விரட்டும் பணியில் சுகாதாரத்துறையினர்,தீவிர நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments