தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் தேதி விரைவில் முடிவு

0 790
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் தேதி விரைவில் முடிவு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலுக்கான புதிய தேதி விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

2020-2022ஆம் ஆண்டுக்கான நிர்வாகக் குழு - செயற்குழு உறுப்பினர் தேர்தலை, செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க, சென்னை உயர்நீதி மன்றம் கடந்த 20ஆம் தேதி, உத்தரவு பிறப்பித்திருந்தது.

எனவே, ஏப்ரல் 17ஆம் தேதி வெளியிடப்பட்டிருந்த தேர்தல் அட்டவணை ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், உறுப பினர்கள் சந்தா செலுத்த ஜூன் 19 வரை கால அவகாசம் வழங்கி உள்ளது. இதனிடையே, தயாரிப்பாளர் சங்க தேர்தலில், விஷால் தலைமையிலான அணி யினர் மீண்டும் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments