உலக அளவில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் ரஷ்யாவை பின்தள்ளி 2ம் இடத்துக்கு வந்தது பிரேசில்

0 2441
உலக அளவில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் ரஷ்யாவை பின்தள்ளி 2ம் இடத்துக்கு வந்தது பிரேசில்

உலகில் கொரோனா நோயால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் ரஷ்யாவை பின்தள்ளி பிரேசில் 2ம் இடத்துக்கு வந்துள்ளது.

உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், ரஷ்யா 2ம் இடத்திலும், பிரேசில் 3ம் இடத்திலும் நேற்று இருந்தன. இந்நிலையில் பிரேசிலில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 30 ஆயிரத்தையும், பலி எண்ணிக்கை 21 ஆயிரத்தையும் தாண்டியது.

அதேவேளையில் ரஷ்யாவில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 25 ஆயிரத்தையும், பலி எண்ணிக்கை 3 ஆயிரத்து இருநூறையும் தாண்டியிருந்தது. இதனால் பிரேசில் நாடு, ரஷ்யாவை பின்தள்ளி, உலக அளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் 2ம் இடத்துக்கு வந்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments