ஆக்ரா விவசாயிகளுக்கு வெட்டுக்கிளிகள் குறித்து எச்சரிக்கை

0 635
ஆக்ரா விவசாயிகளுக்கு வெட்டுக்கிளிகள் குறித்து எச்சரிக்கை

உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்த விவசாயிகளுக்கு, வெட்டுக்கிளிகள் தாக்குதல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் விவசாய நிலங்களில் பாதிப்பை ஏற்படுத்திய வெட்டுக்கிளிகள், இந்தியாவுக்குள்ளும் தற்போது புகுந்து கைவரிசை காட்டி வருகின்றன. ராஜஸ்தான் மாநிலம் கரெளலி ( Karauli) மாவட்டத்தில் விவசாய நிலங்களில் வெட்டுக்கிளிகள் தற்போது கடும் சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன.

அங்கிருந்து ஆக்ரா விவசாய பகுதிகளை நோக்கி வெட்டுக்கிளிகள் படையெடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆதலால் ஆக்ரா விவசாயிகளுக்கு மாவட்ட நிர்வாகம் தரப்பில் எச்சரிக்கை விடுத்துள்ளது. வெட்டுக்கிளிகளை விரட்டியடிக்க விவசாய நிலங்களில் டிரம் கருவிகளை இசைக்க வேண்டுமெனவும், புகை மூட்ட வேண்டுமெனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதேபோல் 50 டிராக்டர்கள், 3 தீயணைப்பு வண்டிகள் மூலம் மருந்து தெளிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments