தமிழகத்தில் நிபந்தனைகளுடன் ஆட்டோக்களை இயக்க அனுமதி

0 7246

சென்னை தவிர்த்து, தமிழகம் முழுவதும் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை ஆட்டோ, சைக்கிள் ரிக்சா இயங்க தமிழக அரசு தளர்வு வழங்கியுள்ளது.

பொதுமக்களின் வாழ்வாதாரம் மற்றும் கொரோனா தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டு, சில பாதுகாப்பு வழிமுறைகளுடன் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. தற்போது, சென்னை மாநகராட்சி காவல் எல்லையைத் தவிர, தமிழ்நாடு முழுவதும் ஆட்டோ, சைக்கிள் ரிக்சா ஆகிய வாகனங்கள் நாளை முதல் இயக்க அனுமதிக்கப்படுகிறது.

ஓட்டுநர் மற்றும் ஒரு பயணி மட்டும் பயணிக்கும் வகையில், காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டும் ஆட்டோ, சைக்கிள் ரிக்சாக்களை இயக்க அனுமதிக்கப்படுகிறது.

நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஆட்டோ, சைக்கிள் ரிக்சா ஆகியவற்றை இயக்க அனுமதி இல்லை. நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் வாழும் ஆட்டோ/ரிக்சா ஓட்டுநர்களுக்கும் அவ்வாகனங்களை ஓட்ட அனுமதி இல்லை. பயணிகள் பயன்படுத்தும் வகையில் வாகனங்களில் சானிட்டைசர்களை ஓட்டுநர்கள் வைத்திருக்க வேண்டும்.

ஓட்டுநர்களும், பயணியர்களும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். மேலும், ஆட்டோ, சைக்கிள் ரிக்சாவை தினமும் மூன்று முறை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். ஓட்டுநர்கள் அடிக்கடி சோப்பு கொண்டு கை கழுவியும், வாகனத்தில் சுகாதாரத்தையும் பேண வேண்டும் என தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments