அண்ணா பல்கலை. சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் மத்திய அரசு முடிவு எடுக்கப்படவில்லை - அமைச்சர் அன்பழகன்

0 593
கொரோனா ஓய்ந்த பின்னரே கல்லூரிகள் திறக்கப்படும் என்று கூறியுள்ள உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மத்திய அரசு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பாக, மே 31ஆம் தேதிக்குள் முடிவைத் தெரிவிக்குமாறு, தமிழக அரசுக்கு மத்திய அரசு அவகாசம் வழங்கியுள்ளது.

இந்நிலையில், உயர்கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் நேற்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில், சிறப்பு அந்தஸ்துக்குப் பிறகு, அண்ணா பல்கலை. இட ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய அரசிடம் இருந்து தெளிவான விளக்கம் கிடைத்தால் மட்டுமே தமிழக அரசு முடிவெடுக்கும் என்றும், மத்திய அரசின் கால அவகாசத்தைப் பற்றி தமிழக அரசு கவலைப்படவில்லை என்றும் அன்பழகன் கூறியுள்ளார்.

சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் வரும் 27-ஆம் தேதி ஓய்வு பெறுவதால், அதற்கு பின்னர் பல்கலைக்கழக நிர்வாக பணிகளை மேற்கொள்ள ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments