கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் இருப்பது கூட பெருமைக்குரிய அடையாளம்தான் - டிரம்ப்

0 2769

கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் இருப்பது கூட பெருமைக்குரிய அடையாளம்தான் என அந்நாட்டு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 16 லட்சத்தையும், பலி எண்ணிக்கை 1 லட்சத்தையும் நெருங்கி வருகிறது. இந்நிலையில், மிகச்சிறப்பான முறையில், அதிக எண்ணிக்கையில் பரிசோதனைகள் மேற்கொள்வதாலேயே கொரோனா பாதிப்பு பட்டியலில் முதலிடத்தில் அமெரிக்கா இருக்கிறது என டிரம்ப் கூறியுள்ளார்.

வேறு எந்த நாட்டையும் விட அமெரிக்கா அதிக பரிசோதனைகளை மேற்கொள்வதாகவும், இதை மோசமான விஷயமாக பார்க்கவில்லை, மதிப்பிற்குரியதாகவே கருதுவதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். பரிசோதனைகள் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் வல்லுநர்களுக்கு இது மாபெரும் புகழாரம் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments