அறிகுறி இல்லாதவர்களிடமிருந்து கொரோனா வைரஸ் பரவாது-மத்திய சுகாதாரத்துறை

0 3008
அறிகுறி தோன்றாதவர்கள் அல்லது காய்ச்சல் ஏதும் இல்லாமல், லேசான அறிகுறி மட்டுமே உள்ளவர்களிடமிருந்து கொரோனா வைரஸ் பரவாது

அறிகுறி தோன்றாதவர்கள் அல்லது காய்ச்சல் ஏதும் இல்லாமல், லேசான அறிகுறி மட்டுமே உள்ளவர்களிடமிருந்து கொரோனா வைரஸ் பரவாது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

லேசான அறிகுறி உள்ள கொரோனா நோயாளிகளை, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யும்போது, பரிசோதனை செய்ய வேண்டியதில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அண்மையில் கூறியிருந்தது.

அறிகுறி தெரிந்த பிறகு 10 நாட்கள் கழித்து, 3 நாட்களுக்கு தொடர்ந்து காய்ச்சல் இல்லை எனில், நெகடிவ் ஆகிவிட்டதா என பரிசோதனை செய்யாமலே, கொரோனா நோயாளியை டிஸ்சார்ஜ் செய்துவிடலாம் என்றும், இருப்பினும் நோயாளி வீட்டில் 7 நாட்களுக்கு தனிமையில் இருக்க வேண்டும் என்று திருத்தப்பட்ட புதிய வழிகாட்டுதல் வெளியிடப்பட்டது.

இந்த புதிய வழிகாட்டுதல் குறித்து கவலைகள் எழுப்பப்பட்டிருந்தன. இந்நிலையில், அத்தகைய நபர்களிடமிருந்து 10 நாட்கள் கழித்து கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இல்லை என மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் விளக்கம் அளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments