சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 1,538ஆக அதிகரிப்பு

0 797

சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை ஆயிரத்து 538ஆக அதிகரித்துள்ளது.

சென்னையின் 15 மண்டலங்களிலும் நோய் பாதிப்பு எண்ணிக்கை 8 ஆயிரத்து 228ஆக உயர்ந்துள்ளது. இதில் ராயபுரம் மண்டலத்துக்கு அடுத்து அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் ஆயிரத்து 192 பேருக்கு கொரோனா நோய் பாதிப்பு இதுவரை கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கடுத்து அதிகபட்சமாக திரு.வி.க.நகர் மண்டலத்தில் 976 பேருக்கும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 869 பேருக்கும் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையின் 15 மண்டலங்களிலும் இதுவரை 2 ஆயிரத்து 826 பேர் குணமான நிலையில், 59 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் கொரோனா பாதித்தோரில் 60 புள்ளி 27 சதவீதம் பேர் ஆண்கள் ஆவர், 39 புள்ளி 71 சதவீதம் பேர் பெண்கள் ஆவர். 20 முதல் 29 வயது வரையிலானோர் அதிக எண்ணிக்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments