பிரபல பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் மீது மனைவி பகிரங்க குற்றச்சாட்டு

0 4296
பிரபல பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் மீது மனைவி பகிரங்க குற்றச்சாட்டு

பாலிவுட்டின் பிரபல நடிகர் நவாசுதீன் சித்திக்கிடம் விவாகரத்து கோரி சட்டப்படி நோட்டீஸ் அனுப்பியுள்ள அவருடைய மனைவி ஆலியா சமூக ஊடகங்களில் கணவர் மற்றும் அவர் குடும்பத்தினர் மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார்.

டிவிட்டரில் புதிய கணக்கைத் தொடங்கி பதிவுகளை இடும் ஆலியா, விரைவில் அதிர்ச்சியளிக்கும் பல உண்மைகளை வெளியிடப் போவதாக கூறியுள்ளார். நவாசுதீனுடன் திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கும் தாயான ஆலியா தம்மை கணவரும் அவர் குடும்பத்தினரும் மிகவும் கொடுமைப்படுத்தியதாக தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் உள்ள புதானாவில் தமது இல்லத்தில் ஊரடங்கு காரணமாக முடங்கியுள்ள நவாசுதீன் சித்திக் தரப்பில் இன்னும் எந்த பதிலும் வரவில்லை என்று ஆலியாவின் வழக்கறிஞர் தெரிவித்தார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments