வீட்டு உரிமையாளரை கடித்து குதறிய பிட்புல் ரக நாய்

0 30564

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வீட்டின் உரிமையாளரை கடித்து குதறிய பிட்புல் ரக நாயை அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொடைக்கானல் அட்டுவம்பட்டி பகுதியில் கேரளாவைச் சேர்ந்த ஸ்டீபன் என்பவர் தங்கும் விடுதி நடத்தி வருகிறார். அவர் அதே பகுதியைச் சேர்ந்த தங்கதுரை என்பவரின் வீட்டில் நண்பர்களுடன் வாடகைக்கு வசித்து வருகிறார். 

ஸ்டீபன் அமெரிக்காவை பூர்வீகமாக கொண்ட மிகவும் ஆக்ரோசத்தன்மை கொண்ட  பிட்புல் ரக நாயை வளர்த்து வருகிறார். இவ்வகை நாயானது மிகவும் மூர்க்க குணம் கொண்டதோடு தன்னை வளர்க்கும் உரிமையாளர்களின் உத்தரவுகளுக்கு மட்டுமே கீழ்ப்படியக்கூடியது என்று சொல்லப்படுகிறது.

வெளி மனிதர்கள் அல்லது பரிட்சியம் அல்லாத மனிதர்களை கண்டால் பிட்புல் மூர்க்கமாக தாக்கும் தன்மை உடையது என்றும் கூறுகிறார்கள்.

இந்த அளவிற்கு ஆபத்தான பிட்புல் ரக நாய்களை உரிய அனுமதி மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றியே வளர்க்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. OUTஇந்நிலையில் கடந்த 14ஆம் தேதி வீட்டு உரிமையாளர் தங்கதுரை, ஸ்டீபனிடம் வாடகை கேட்க சென்றுள்ளார். அப்போது தங்கதுரையை பார்த்த மாத்திரத்தில் ஸ்டீபனின் பிட்புல் நாய் பாய்ந்து தாக்கியதாக சொல்லப்படுகிறது.

கை, கால்கள், கழுத்து என உடல் முழுவதும்  காயமடைந்த அவர் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் தற்போது காயம் சரியாகி வருகிறது. ஆபத்தான பிட்புல் நாய் தன்னை தாக்கியது குறித்து தங்கதுரை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் ஆபத்துமிக்க பிட்புல் நாயை மக்கள் வசிக்கும் பகுதியில் வளர்கக்கூடாது என காவல்துறையினர் ஸ்டீபனை எச்சரித்துவிட்டு மட்டும் சென்றதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தற்போது ஸ்டீபன் அட்டுவம்பட்டியிலிருந்து புலியூர் கிராமத்திற்கு சென்றுள்ளதாகவும் அங்கு அவர் பிட்புல் ரக நாயை வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது- இது குறித்து உரிய முறையில் விசாரணை நடத்தி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments