கொரோனா உச்சம் நீடிப்பு.. கட்டுக்குள் வருமா? மக்கள் எதிர்பார்ப்பு

0 2726

நாடு முழுவதும்  42 ஆயிரம் பேர், கொரோனாவின் பிடியில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். அதிகபட்சமாக, மஹாராஷ்டிராவில் ஒரே நாளில் 2 ஆயிரத்து 250 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆக, இந்தியாவில், கொரோனா பாதிப்பு, ஒரு லட்சத்து 11 ஆயிரத்தை தாண்டி விட்டது.

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும், உயிரிழப்பும்
நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.

மஹாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 250 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி, அங்கு மட்டும் கொரோனா பாதிப்பு, 39 ஆயிரத்தை தாண்டி விட்டது. ஒரே நாளில் 65 பேர் மரணம் அடைந்ததால் உயிர்ப்பலி ஆயிரத்து 400 ஐ நெருங்கி உள்ளது.

தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவியில் 25 பேர் உள்பட மும்பை நகரில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் ஆயிரத்து 372 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.மஹாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக, கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு 2- வது இடம் வகிக்கிறது.

குஜராத்தில் வைரஸ் தொற்று உறுதி ஆனோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 500 - ஐ தாண்ட, டெல்லியில் கொரோனா பாதிப்பு, 11 ஆயிரத்தை கடந்து விட்டது.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசத்திலும் கொரோனா பாதிப்பு, கணிசமாக உயர்ந்துள்ளது.மேற்கு வங்காளம், ஆந்திரா, பஞ்சாப், தெலங்கானா, பீஹார், கர்நாடகா மற்றும் ஜம்மு - காஷ்மீர் மாநிலங்களிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித் துள்ளது.

ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டோர் பட்டியலில், ஏற்கனவே, 14 மாநிலங்கள் இடம் பிடித்திருக்க, ஹரியானா மற்றும் ஓடிசா மாநிலங்களும் இந்த பட்டியலில் இடம் பிடிக்க
காத்திருக்கின்றன.கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 24 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, நாடு முழுவதும் 61 ஆயிரத்து 149 பேர் பல்வேறு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வர, கொரோனாவின் பிடியில் இருந்து இதுவரை, சுமார் 42 ஆயிரம் பேர், குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments