ஊரடங்கில் இருந்து 10, 12ம் வகுப்பு தேர்வுகளுக்கு விதி விலக்கு-மத்திய உள்துறை அமைச்சகம்

0 2993

ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து 10 மற்றும் 12ம் வகுப்புத் தேர்வுகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அனைத்து மாநில தலைமை செயலர்களுக்கும் மத்திய உள்துறை  செயலர் அஜய் பல்லா (Ajay bhalla) கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அவர், மாணவர்களின் கல்வி நலன்,மாநில அரசுகள், சிபிஎஸ்இ ஆகியவற்றிடம் இருந்து வந்த கோரிக்கையை பரிசீலித்து தேர்வுகளுக்கு சில நிபந்தனைகளுடன் விதிவிலக்கு அளிக்கப்படுவதாக  தெரிவித்துள்ளார்.

கட்டுபடுத்தப்பட்ட பகுதிகளில் தேர்வு மையத்தை அமைக்கக் கூடாது, தேர்வு மையங்களில் ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், தெர்மல் ஸ்கிரினிங் செய்வதோடு, சானிடைசர் வசதி செய்து தர வேண்டும், சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட வேண்டும், சிறப்பு பேருந்து வசதி செய்து தர வேண்டும் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments