ஸ்பெயினில் நாளை முதல் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம்

0 597

ஸ்பெயினில் வீட்டை வீட்டு வெளியே வருவோருக்கு நாளை முதல் முகக்கவசம் அணிவதை அந்நாட்டு அரசு கட்டாயமாக்கியுள்ளது.

கொரோனா பரவலில் உலக அளவில் முதல் 5 இடங்களில் ஸ்பெயினும் உள்ளது.

அந்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு விதிவிலக்குடன் தளர்த்தப்பட்டுள்ளது. எனவே கடந்த சில நாள்களாக வீட்டுக்குள் முடங்கியிருந்த மக்கள் வெளியே நடமாடத் தொடங்கியுள்ளனர். இதனால் கொரோனா பரவல் அதிகரித்து விடக் கூடாது என்பதற்காக 6 முதல் அனைத்து வயது நபர்களுக்கும் நாளை முதல் முகக்கவசத்தை அந்நாட்டு அரசு கட்டாயமாக்கியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments