பைக்கில் இருந்து குழந்தை கீழே விழுந்தது கூட தெரியாமல் மதுபோதையில் சென்ற தந்தை

0 4321

அரியலூர் அருகே இருசக்கர வாகனத்திலிருந்து குழந்தை விழுந்ததுகூட தெரியாமல் தந்தை மதுபோதையில் தள்ளாடி விபத்தில் சிக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. 

ஜெயங்கொண்டம் அருகே திருமங்கலம் கிராமத்தை சேர்ந்த செல்வம் நேற்று உறவினரின் இல்ல துக்க நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அங்கு அளவுக்கு அதிகமாக மதுஅருந்திய அவர் சுயநினைவின்றி, தனது 5 வயது குழந்தை அன்புஅமுதனுடன் வீடு திரும்பியுள்ளார்.

புதுச்சாவடி அருகே வந்தபோது, இருசக்கரவாகனத்தில் முன்னாள் அமர்ந்திருந்த அன்புஅமுதன் வழுக்கி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்து ரத்தம் கசிந்து மயக்கநிலையில் சாலையில் கிடந்துள்ளான். ஆனால் குழந்தை விழுந்ததுகூட தெரியாமல் சென்ற செல்வம் சிறிது தொலைவில் முட்புதருக்குள் விழுந்துள்ளார்.

சாலையில் குழந்தை மயங்கிக் கிடப்பதைக் கண்ட சின்னம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments