அயர்லாந்தில் ஆளில்லா விமானம் மூலம் மருந்துகள் உணவுப் பொருட்களை வழங்கும் சேவை

0 1184
அயர்லாந்தைச் சேர்ந்த நிறுவனம் ஆளில்லாக் குட்டி விமானத்தில் மருந்துகளையும் உணவு வகைகளையும் எடுத்துச் சென்று வீடு வீடாக வழங்கும் பணியைத் தொடங்கியுள்ளது.

அயர்லாந்தைச் சேர்ந்த நிறுவனம் ஆளில்லாக் குட்டி விமானத்தில் மருந்துகளையும் உணவு வகைகளையும் எடுத்துச் சென்று வீடு வீடாக வழங்கும் பணியைத் தொடங்கியுள்ளது.

அயர்லாந்தில் கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. மூத்த குடிமக்கள் நோய் தொற்றாமல் தடுக்க வீட்டுக்குள்ளேயே தங்கி இருக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் மன்னா ஏரோ என்கிற நிறுவனம் மணிகால் என்னும் நகரில் மூத்த குடிமக்களுக்காக உணவு வகைகளையும், மருந்துகளையும் ஆளில்லாக் குட்டி விமானங்கள் மூலம் வீடுகளுக்கே கொண்டு சென்று வழங்கும் பணியைத் தொடங்கியுள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் 600 நகரங்களில் இந்தச் சேவையைத் தொடங்க உள்ளதாகவும், ஒரு விமானம் ஒருநாளில் நூறு முறை 4 கிலோ எடையுள்ள பொருட்களை எடுத்துச் சென்று வழங்க முடியும் என்றும் மன்னா ஏரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments