ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 1,272ஆக அதிகரிப்பு

0 514

சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை ஆயிரத்து 272ஆக அதிகரித்துள்ளது.

சென்னையின் 15 மண்டலங்களிலும் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 117ஆக உயர்ந்துள்ளது. இதில் ராயபுரம் மண்டலத்துக்கு அடுத்து மிகவும் அதிகம் பாதிக்கப்பட்ட மண்டலமாக கோடம்பாக்கம் மண்டலம் உருவெடுத்துள்ளது. அந்த மண்டலத்தில் பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்து 77ஆக உயர்ந்துள்ளது. இதற்கடுத்து திரு.வி.க. நகர் மண்டலத்தில் 835 பேரும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 786 பேரும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். தண்டையார் பேட்டை மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 610ஆக உயர்ந்துள்ள நிலையில், அண்ணாநகர் மண்டலத்தில் 586ஆகவும், வளசரவாக்கம் மண்டலத்தில் 532ஆகவும் அதிகரித்துள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments