பீகாரில் வெளிமாநிலத்தில் இருந்து வந்தோரில் 8 சதவீதம் பேருக்கு கொரோனா

0 533

பீகாரில் வெளிமாநிலங்களில் இருந்து திரும்பிய தொழிலாளர்களில் 8 விழுக்காட்டினருக்கு கொரோனா இருப்பது சோதனையில் தெரியவந்துள்ளது.

பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் பல்வேறு மாநிலங்களில் பணியாற்றி வந்த நிலையில் ஊரடங்கால் வேலையிழந்து சொந்த ஊருக்குத் திரும்பி வருகின்றனர். திங்கள் நிலவரப்படி 7 லட்சத்து நாற்பதாயிரம் பேர் ஊர் திரும்பியுள்ளனர்.

இவர்களில் அறிகுறி தென்பட்ட 11 ஆயிரத்து எண்ணூறு பேரிடம் சளி மாதிரி எடுத்துச் சோதனை செய்யப்பட்டது. எட்டாயிரத்து 337 மாதிரிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் 651 பேருக்கு கொரோனா உள்ளது தெரியவந்தது.சோதனை முடிவு அறிவிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் கொரோனா பாதிப்புள்ளோர் எண்ணிக்கை 8 விழுக்காடாகும். வெளிமாநிலத்தில் இருந்து திரும்பிய அனைவருக்கும் சோதனை செய்தால் இந்த எண்ணிக்கை 55ஆயிரம் வரை அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments