மார்ச் வரையான காலாண்டில் ரூ. 5,237 கோடி இழப்பு - ஏர்டெல்

0 1571
மார்ச் வரையான காலாண்டில் ரூ. 5,237 கோடி இழப்பு - ஏர்டெல்

பார்தி ஏர்டெல் நிறுவனம் மார்ச் வரையான காலாண்டில் 5,237 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் நிறுவனத்தின் வருமானம் 20,602 கோடியாக இருந்த நிலையில் 107 கோடி ரூபாய் லாபம் காண்பிக்கப்பட்டது. இந்த ஆண்டு 23,722 கோடி ரூபாய் வருமானம் கிடைத்தும் இழப்புக் கணக்கு காண்பிக்கப்படுகிறது.

இக்கட்டான கொரோனா கால கட்டத்தில் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் முக்கியப் பங்கு வகிக்கும் நிலையில் அவற்றின் மீதான அதிகப்படியான வரிகள் கட்டணங்கள் கூடுதல் சுமையை ஏற்படுத்துவதாகவும், அவற்றைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments