அத்துமீறி நுழைந்ததாக அமெரிக்காவில் இருந்து 2 தமிழர்கள் உள்பட 161 பேரை நாடு கடத்த திட்டம்

0 4141
அமெரிக்காவில் அத்துமீறி நுழைந்ததாக கைது செய்யப்பட்டவர்களில் 2 தமிழர்கள் உள்பட 161 பேர் நாடு கடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவில் அத்துமீறி நுழைந்ததாக கைது செய்யப்பட்டவர்களில் 2 தமிழர்கள் உள்பட 161 பேர் நாடு கடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சட்ட விதிகளை மீறி குறிப்பாக மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவில் நுழைந்ததாக கைது செய்யப்பட்டு 95 சிறைகளில் ஆயிரத்து 739 இந்தியர்கள் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 3 பெண்கள் உள்பட 161 பேர் சிறப்பு விமானம் மூலம் பஞ்சாபின் அமிர்தசரஸ் அழைத்து வரப்பட உள்ளதாக வட அமெரிக்க பஞ்சாபி சங்கத்தின் நிர்வாக இயக்குனர் சத்னம் சிங் சாஹல் தெரிவித்துள்ளார்.

அதிகபட்சமாக  ஹரியானாவைச் சேர்ந்த 76 பேர், பஞ்சாப்பைச் சேர்ந்த 56 பேர் நாடு கடத்தப்பட உள்ளனர் என்றும் சிறையில் உள்ள மற்றவர்களின் நிலை குறித்து தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments