பாக்., அணு ஆராய்ச்சி திட்டத்தின் தந்தை தான் சிறைவைக்கப்பட்டிருப்பதாக உச்சநீதிமன்றத்துக்கு கடிதம்

0 3060
பாகிஸ்தான் அணு ஆராய்ச்சி திட்டத்தின் தந்தையான அப்துல் காதீர் கான், தான் சிறை வைக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு உச்சநீதிமன்றத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

பாகிஸ்தான் அணு ஆராய்ச்சி திட்டத்தின் தந்தையான அப்துல் காதீர் கான், தான் சிறை வைக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு உச்சநீதிமன்றத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

தனது ஆலோசகர் மூலம் அவர் கைப்பட எழுதி அனுப்பிய அந்த கடிதத்தில் நீதிமன்றத்தில் முறையீடு செய்வதற்கு கூட தான் அனுமதிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டின் அணு ஆயுதங்களை கையாளும் செயலாக்க திட்டப்பிரிவு அதிகாரிகள் தம்மை உச்சநீதிமன்றத்துக்கு அழைத்து வந்த போதும், வழக்காடு மன்றத்துக்குள் அனுமதிக்கவில்லை என புகார் கூறியுள்ள அவர், எனவே தனது அடிப்படை உரிமைகளை பாதுக்காப்பதோடு, தனது தரப்பு வாதத்தை முன்வைக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

வடகொரியா, லிபியா ஆகிய நாடுகளுக்கு அணு ஆயுதங்கள் தயாரிக்க தேவையான உபகரணங்கள் கிடைப்பதற்கு காதீர் கான் உதவியதாக கடந்த 2004ம் ஆண்டு குற்றம்சாட்டப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments