முக்கிய துறைகளில் கால் பதிக்கும் தனியார் 4 - வது கட்ட சலுகைகள் அறிவிப்பு

0 6050
பிரதமரின் ரூ.20 லட்சம் கோடி ஊக்குவிப்பு திட்டம் குறித்து 4வது நாளாக விளக்கம்

விமான நிலையங்கள், மின் விநியோகம், அணுசக்தி துறைகளில் முதலீடுகளை எளிதாக ஈர்கும் வகையில் கொள்கை ரீதியிலான சீர்திருத்தங்கள் செய்யப்படும் என அறிவித்துள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கனிமம், பாதுகாப்புத்துறை உட்பட 8 முக்கிய துறைகளிலும் கொள்கை மாற்றங்கள் உருவாக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திரமோடி அறிவித்திருந்த 20 லட்சம் கோடி ரூபாய் சிறப்பு பொருளாதார திட்டம் குறித்து, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 4- வது நாளாக புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் விளக்கி கூறினார்.

பாதுகாப்புத்துறையிலும் தற்சார்பு அடைய வேண்டியது அவசியம் என குறிப்பிட்ட நிர்மலா சீதாராமன், சில குறிப்பிட்ட வகையான ஆயுதங்களை இறக்குமதி செய்யத் தடை விதிக் கப்படும் என்றார். அதேநேரம், பெரும்பான்மையான ஆயுதங்களை இந்தியாவிலேயே தயாரிக்க கவனம் செலுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

பாதுகாப்பு உற்பத்தி துறையில் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பு 49 சதவீதத்தில் இருந்து 74 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளதாக நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

ராணுவத் தளவாட உற்பத்தி தொழிற்சாலைகள், இனி நிறுவனங்களாக மாற்றப்படும் என அறிவித்த நிர்மலா சீதாராமன், ராணுவத் தளவாடங்கள் இறக்குமதி மசோதா விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றார். ராணுவ தளவாட உற்பத்தியில் தன்னிறைவை எட்டும் வகையில் மேக் இன் இந்தியா திட்டம் பயன்படுத்தப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

இந்தியாவில் மேலும் 6 விமான நிலையங்கள் தனியார், அரசு பங்களிப்புக்காக ஏலம் விடப்படும் என கூறிய அவர், விமான நிலையங்களை மேம்படுத்துவதற்காக.2 ஆயிரத்து 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாகவும், இந்திய வான்பரப்பை விமானங்கள் பயன்படுத்துவதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்றும் தெரிவித்தார்.

விமானப்போக்குவரத்து துறையில் முதலீடுகளை அதிகரிக்க நடவடிக்கை - மின்சாரத் துறையிலும் முதலீடுகளை ஈர்க்க கொள்கை மாற்றம் - நிலக்கரி, கனிமம் மற்றும் பாதுகாப்புத்துறையிலும் புதிய கொள்கைகள் - விண்வெளித்துறையில் புதிய வாய்ப்புகளை பயன்படுத்தும் வகையில் கொள்கைகள் உருவாக்கப்படும் - யூனியன் பிரதேசங்களில் உள்ள மின் விநியோக நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படும் - என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளையும் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments