ஆந்திரத்தில் 2205 பேருக்கு கொரோனா பாதிப்பு..!

0 703

ஆந்திர மாநிலத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்து 205 ஆக உயர்ந்துள்ளது.

ஆந்திர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 48 பேருக்குக் கொரோனா இருப்பது சோதனையில் தெரியவந்துள்ளது. இதையடுத்துப் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை இரண்டாயிரத்து 205 ஆக உயர்ந்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் ஆயிரத்து 353 பேர் முழுமையாகக் குணமடைந்துள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. 803 பேருக்கு மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதிக அளவாகக் கர்நூல் மாவட்டத்தில் 608 பேரும், குண்டூர் மாவட்டத்தில் 413 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கிருஷ்ணா மாவட்டத்தில் 367 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments