செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 55 பேருக்கு கொரோனா பாதிப்பு

0 3606

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் 55 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

கோயம்பேடு சந்தையில் இருந்து திரும்பியவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், ஊரடங்கு காரணமாக வெளிமாநிலங்களில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்கள் என 55 பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது.

மாவட்டத்தில் ஏற்கனவே 450 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், புதிய பாதிப்புகள் மூலம் அந்த எண்ணிக்கை 505 ஆக உயர்ந்துள்ளது. இவர்கள் அனைவரும் சென்னை ராஜீவ்காந்தி, ஓமந்தூரார், செங்கல்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தற்போதைய நிலவரப்படி 246 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments