சலூன்களில் பணியாற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு தமிழக அரசு ரூ.2000 நிதி உதவி

0 2992

முடித்திருத்துவோர் நல வாரியங்களில் உறுப்பினர்களாக அல்லாதவர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நல வாரியங்களில் பதிவு செய்யாத தொழிலாளர்கள்,  கிராமப் புறங்களில் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களிடமும், பேரூராட்சி பகுதிகளில் சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாக அலுவலர்களிடமும், நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் கடைகள் இருக்கும் இடத்தின் மண்டல அலுவலர்களிடமும் மனுவாக சமர்ப்பிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அம்மனுக்களை ஆய்வு செய்து மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கு பரிந்துரைக்க வேண்டும் எனவும், தகுதி வாய்ந்த மனுக்கள் மீது மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments