வெளி மாவட்டங்களில் தங்கியுள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப உத்தரவு

0 1704
வெளி மாவட்டங்களுக்குச் சென்று தங்கி உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வை முன்னிட்டு வரும் 21-ஆம் தேதிக்குள் பணியாற்றும் மாவட்டத்துக்கு திரும்ப பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

ஜூன் 1 முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற உள்ள நிலையில், தேர்வுக்கான ஆயத்தப் பணிகளை பள்ளிக் கல்வித்துறை தீவிரப்படுத்தி உள்ளது. இந்நிலையில் ஆசிரியர்கள் சொந்த மாவட்டத்துக்கு திரும்பி உள்ளதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்யவும் திரும்பாத ஆசிரியர்களின் விவரங்களை 21-ம் தேதி காலை 11 மணிக்குள் சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் இருப்பிடத்தை தலைமை ஆசிரியர்கள் அடங்கிய பள்ளிக்குழு உறுதி செய்யவும், எவரேனும் வெளிமாவட்டங்களில் இருந்தால் அவர்களுக்கு இ பாஸ் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments