புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சாலையிலும் தண்டவாளத்திலும் நடக்க வேண்டாம்-மத்திய உள்துறை அமைச்சகம்

0 634

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் யாரும் சாலைகளிலோ ரயில் தண்டவாளங்களிலோ நடமாடக்கூடாது என்றும் அவர்களுக்கு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறும் அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து அனைத்து மாநில தலைமைச் செயலர்களுக்கும் கடிதம் எழுதியுள்ள உள்துறைச் செயலர் அஜய் பல்லா, சாலைகளிலும் ரயில் நிலையங்களிலும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் நடமாடுவதால் அவர்களுக்கு உரிய முறையில் ஆலோசனைகள் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

பேருந்துகளையும் ரயில்களையும் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் நடந்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை என அவர்களுக்கு விளக்க வேண்டும் என்றும் உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

நடந்து செல்வோரை அருகில் உள்ள அரசு முகாம்களுக்கு அழைத்துச் சென்று உணவு, குடிநீர், மருத்துவ வசதிகளை செய்துத் தரும்படியும் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments