புலம் பெயர் தொழிலாளர்களுக்காக 932 ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை இயக்கி உள்ளதாக தகவல்

0 705
ஊரடங்கால் சிக்கிய புலம் பெயர் தொழிலாளர்களுக்காக இது வரை 932 ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை இயக்கி உள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஊரடங்கால் சிக்கிய புலம் பெயர் தொழிலாளர்களுக்காக இது வரை 932 ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை இயக்கி உள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த ரயில்களின் வாயிலாக சுமார் 11 லட்சம் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பிச் சென்றுள்ளனர். இன்று மட்டும் 145 ஷ்ராமிக் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகவும் ரயில்வே தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக உத்தரபிரதேச அரசு 487 ரயில்களுக்கு அனுமதி அளித்ததாகவும் அது தெரிவித்துள்ளது. சொந்த மாநிலங்களுக்கு திரும்ப விழையும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால்  ஒவ்வொரு ரயிலிலும் 1200 ஆக இருந்த பயணியர் எண்ணிக்கை கடந்த திங்கள் கிழமை முதல்1700 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments