ஈரோடு மாவட்டத்தில் 31 நாட்களாக கொரோனா பாதிப்பு இல்லை - ஆட்சியர்

0 1969

ஈரோடு மாவட்டத்தில் 31 நாட்களாக கொரோனா பாதிப்பு இல்லாத நிலையில் 80 சதவிகிதம் தொழிற்சாலைகள் இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மாவட்டத்தில் சிறு வியாபாரத் தனிக்கடைகள், கூட்டம் சேர்க்காத வியாபார நிறுவனங்கள், குளிர்சாதனமற்ற நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கபட்டுள்ள நிலையில் அவை விதிகளுக்கு உட்பட்டு செயல்படுகின்றனவா என ஆய்வு செய்தார். குளிர்சாதனங்களை இயக்கும் கடைகளுக்கு சீல் வைக்க உத்தரவிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 40 முதல் 50 சதவிகித தொழிலாளர்களைக் கொண்டு தொழிற்சாலைகள் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments