ஆம்னி பேருந்துகளில் கட்டண உயர்வு இல்லை : உரிமையாளர்கள் சங்கம் திட்டவட்டம்

0 6594
ஊரடங்கு முடிந்தபின் கட்டணம் குறித்து முடிவு எடுக்கப்படும் என விளக்கம்

ஆம்னி பேருந்துகளில் கட்டணம் எதுவும் உயர்த்தப்படவில்லை என அதன் உரிமையாளர்கள் சங்கம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இரு மடங்கு கட்டணம் உயர்த்தப்படுமென வெளியாகி இருந்த செய்தி குறித்து விளக்கம் அளித் துள்ள அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன்,  ஊரடங்கு காரணமாக ஒரு லட்சம் தொழிலாளர்களும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்து உரிமையாளர்களும் பாதிக்கப்பட்டு உள்ளதாக   சுட்டிக் காட்டி உள்ளார். 

ஊரடங்கு முடிந்து மீண்டும் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் போது, கட்டணம் சம்பந்தமாக முடிவு எடுக்கப் படுமென அன் பழ கன் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments