சாதாரணமாக பேசினால் கூட வைரஸ் பரவும் அபாயம்-ஆய்வில் அதிர்ச்சி தகவல்

0 3498

சாதாரணமாக பேசும்போது வாயில் இருந்து வெளிப்படும் சுவாசத் துளிகளில் இருக்கும் கொரோனா வைரஸ் எட்டு நிமிடங்களுக்கும் அதிகமாக அந்த இடத்தில் உயிருடன் இருக்கும் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாகவே மருத்துவமனைகள், வீடுகள், மாநாட்டு கூடங்கள், சொகுசு கப்பல்கள் மற்றும் காற்று சுழற்சி அதிகம் இல்லாத இடங்களில் குழு குழுவாக தொற்று ஏற்படுவதாகவும் ஆய்வு தெரிவிக்கிறது.

பென்சில்வேனியா பல்கலைக்கழகம் நடத்திய இந்த ஆய்வில், ஒரு நிமிடம் சத்தமாக பேசினால் வெளியாகும் சுவாசத் துளிகளில் எட்டு நிமிடம் காற்றில் உலவக்கூடிய 1000 வைரான்கள் அடங்கிய கிருமிகளின் அணுக்கருக்கள் இருப்பதாகவும் லேசர் ஒளிக்கற்றைகளை பயன்படுத்தி நடத்தப்பட்ட இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments