நாள்தோறும் வரும் கொரோனா பாதிப்பு ஒரு மாதத்தில் 4 மடங்காக உயர்வு

0 851

நாள்தோறும் கண்டறியப்படும் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை கடந்த ஒருமாதத்தில் 4 மடங்காக அதிகரித்துள்ளது.

ஏப்ரல் 15ஆம் தேதி ஒருநாளில் புதிதாகப் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 990 ஆக இருந்தது.

ஒரு மாதக் காலத்துக்குப் பின் இன்றைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஏறத்தாழ நான்கு மடங்காக உயர்ந்து மூவாயிரத்து 722ஆக உள்ளது.

ஏப்ரல் 15ஆம் தேதி 12 ஆயிரத்து 330 ஆக இருந்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை ஆறு மடங்குக்கு மேல் அதிகரித்து இன்று 78 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 

செவ்வாய் நிலவரப்படி 2 புள்ளி ஏழு ஐந்து விழுக்காட்டினர் தீவிரச் சிகிச்சைப் பிரிவிலும், பூஜ்யம் புள்ளி மூன்று ஏழு விழுக்காட்டினர் சுவாசக் கருவியின் உதவியுடனும், ஒன்று புள்ளி எட்டு ஒன்பது விழுக்காட்டினர் ஆக்சிஜன் செலுத்த வேண்டிய நிலையிலும் உள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments