சென்னையில் காற்று மாசு வழக்கத்தை விட 35 சதவீதம் குறைந்துள்ளது

0 632

சென்னையில் காற்று மாசு வழக்கத்தை விட 35 விழுக்காடு குறைந்திருப்பதாக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி 22 முதல் மார்ச் 21 வரையிலும், தொடர்ந்து மார்ச் 22 முதல் ஏப்ரல் 22 வரையிலும் எடுக்கப்பட்ட அளவுகளின் படி நைட்ரஜன் டை ஆக்ஸைடு மற்றும் கார்பன் மோனாக்ஸைடு போன்ற வாயுக்களின் அளவு 5 முதல் 43 விழுக்காடு வரை குறைந்துள்ளதாக வாரியத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதற்கு பொதுமுடக்கம் காரணமாக வாகன இயக்கமும், தொழிற்சாலைகள் இயங்காமல் இருந்ததும் காரணம் என்று கூறிய அவர், காற்றில் பரவியிருந்த வேறு வாயுக்களான கந்தக டை ஆக்ஸைடு மற்றும் நைட்ரஜன் ஆக்ஸைடு போன்றவை தேசிய சுற்றுப்புற காற்று தரநிர்ணயங்களுக்குள் இருந்தாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments