அமெரிக்காவில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

0 4343
அமெரிக்காவில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

அமெரிக்காவில் ஒரே நாளில் ஆயிரத்து 700க்கும் அதிகமானோர் உயிரிழந்ததைத் தொடர்ந்து அங்கு கொரோனா உயிர்ப்பலி மீண்டும் அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 22 ஆயிரம் பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 லட்சத்து 30 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இவர்களில் 16 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 700க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்ததையடுத்து அங்கு, இறந்தவர்களின் எண்ணிக்கை 85 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

இதனிடையே பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதையடுத்து, அவருக்கு சோதனை செய்யப்பட்டது. ஆனால் முடிவில் நோய்த் தொற்று இல்லை என்பது உறுதியானது. பெல்ஜியத்தில் நாளுக்கு நாள் பெருந்தொற்றின் வேகம் அதிகரித்து வரும் நிலையில் அங்கு அருங்காட்சியங்கள் மற்றும் பள்ளிகளை வரும் 18ம் தேதி திறக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

பொரருளாதாரத்தில் முடங்கிப்போன ஐரோப்பிய ஒன்றியம் விரைவில் மீண்டெழுவதற்கு வாய்ப்பு இல்லை என ஒன்றியத்தின் தலைவர் அர்சுலா தெரிவித்துள்ளார்.பொதுமுடக்கத்தால் முடங்கிய துருக்கியில் நீண்ட நாட்களுக்கு பின்னர் வெளியில் சுற்றுவதற்கு குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கொரோனா வைரஸ் மனிதகுலத்தை விட்டு ஒரு போதும் விலகிப் போகாது என்றும், அதனை கடந்து செல்ல இன்னும் நீண்ட தூரம் பயணிக்கவேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பின் அதிகாரி மைக் ரயான் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த சவுதி அரேபியா மே 23 முதல் புதிய 24 மணி நேர ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளது. இதன் மூலம் ரமலான் தொழுகையின்போது கூட்டத்தை கட்டுப்படுத்த முடியும் என்று அந்நாட்டு அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments