10, 12-ஆம் வகுப்புத் தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

0 2034
மாணவர்களுக்கு கொரோனா அபாயம் உள்ளதால் 10, 12-ஆம் வகுப்புத் தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு கொரோனா அபாயம் உள்ளதால் 10, 12-ஆம் வகுப்புத் தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

10-ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பில் நடத்தப்படாமல் உள்ள ஒரு தேர்வு ஆகியவை ஜூன் 1 முதலும் சி.பி.எஸ்.சி. தேர்வுகள் ஜூலையிலும் அறிவிக்கப்பட்டுள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.

பெரும்பாலான மாணவர்கள் கிராமப்புறங்களில் இருந்து நகரங்களுக்கு வரும் நிலையில் போக்குவரத்து குறித்து எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்றும் மாணவர்கள் தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பார்களா என்பதும் கேள்விக்குறி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா இல்லா நிலை வரும்வரை தேர்வுகளை ஒத்திவைக்கவும் கோரப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments