ஒருவருக்கு கொரோனா உள்ளதா என ஒரு மணி நேரத்தில் கண்டறியும் சோதனை

0 3055

ஒருவருக்கு கொரோனா வைரஸ் உள்ளதா என்பதை ஒரு மணி நேரத்தில் கண்டுபிடிக்கும் சோதனை இன்னும் நான்கு வாரத்தில் நடைமுறைக்கு வர உள்ளது.

மத்திய அறிவியல் தொழில் ஆராய்ச்சிக் குழுவின் கீழ் செயல்படும் மரபியல் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் மையத்தின் மூத்த அறிவியலாளர்கள் தேவஜோதி சக்கரவர்த்தி, சோவிக் மைதி ஆகியோர் புதிய சோதனை முறையைக் கண்டறிந்துள்ளனர்.

இந்தச் சோதனையில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் உள்ளதா என்பதை ஒருமணி நேரத்தில் துல்லியமாகக் கண்டறிய முடியும். பெலுடா டெஸ்ட் எனப்படும் இந்தச் சோதனைக்கு ஐந்நூறு ரூபாய்தான் செலவாகும். ஆர்டிபிசிஆர் முறையில் கொரோனா சோதனை செய்வதற்கு நாலாயிரத்து ஐந்நூறு ரூபாய் செலவாவது குறிப்பிடத் தக்கது.

பெலுடா சோதனை முறைக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் அவசர ஒப்புதலும் வழங்கப்பட்டுள்ளதால் இன்னும் நான்கு வாரங்களில் நடைமுறைக்கு வர உள்ளதாகக் கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments