நாடு முழுவதும் மே 19 முதல் மீண்டும் விமான சேவை?

0 8512

நாடு முழுவதும் மீண்டும் உள்நாட்டு விமான சேவையை வரும் 19ம் தேதி முதல் தொடங்க ஏர் இந்தியா விமான நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மே 19 தொடங்கி ஜூன் 2 வரை சிறப்பு விமானங்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பல்வேறு நகரங்களுக்குச் சென்று சொந்த ஊர் திரும்ப முடியாமல் ஊரடங்கால் முடங்கியுள்ள பல்லாயிரம் பேர் திரும்பிச் செல்ல விமானங்களை இயக்க வேண்டும் என்று கேரளா உள்ளிட்ட சில மாநில அரசுகள் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

இந்நிலையில் டெல்லி ,மும்பை, ஹைதராபாத், பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு விமானசேவையை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கும் கொச்சிக்கும் இடையே மே 19ம் தேதி அன்று ஒருவிமானம் இயக்கப்பட உள்ளது. மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு காத்திருப்பதாகவும் அது கிடைத்தால் விமானங்களை இயக்கத் தயார் என்றும் ஏர் இந்தியா விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments