கொரோனாவை குணப்படுத்த முடியும் எனக் கூறப்படும் மூலிகை கலவையை நிபுணர் குழு மூலம் பரிசீலித்து ஒரு மாதத்தில் முடிவை தெரிவிக்க உத்தரவு

0 9539

கொரோனா தொற்றை சித்த மருத்துவத்தால் குணப்படுத்த முடியும் எனக் கூறப்படும் மூலிகை கலவையை நிபுணர் குழு மூலம் பரிசீலித்து ஒரு மாத காலத்திற்குள் முடிவை தெரிவிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பாதிப்பை சித்த மருத்துவத்தால் குணப்படுத்த முடியுமா என்பது குறித்து ஆய்வு செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுக்கள், நீதிபதிகள் வினீத் கோத்தாரி, புஷ்பா சத்திய நாராயணா அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது இத்தொற்றை சித்தா, ஆயுர்வேதா, யுனானி மருத்துவத்தில் பூரணமாக குணப்படுத்த முடியும் என்பதை நிரூபிக்க தயாராக இருப்பதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

ஏற்கனவே இது குறித்து ஆராய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்ட நீதிபதிகள் மூலிகையை பரிசீலிக்கக் கோரி மத்திய மாநில அரசுகளிடம் விண்ணப்பிக்குமாறு மனுதாரருக்கு அறிவுறுத்தினர். அதனை நிபுணர் குழு மூலம் பரிசீலித்து ஒரு மாதத்திற்குள் அறிக்கை அளிக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments