ஆந்திர மாநில அரசுப் பேருந்துகளில் இருக்கைகள் மாற்றம்

0 10266
ஆந்திர மாநில அரசுப் பேருந்துகளில் இருக்கைகள் மாற்றம்

ஆந்திர அரசுப் பேருந்துகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இருக்கைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

தொலைதூர விரைவுப் பேருந்துகள் முதல், நகரங்களில் இயக்கப்படும் பேருந்துகள் வரை இருக்கையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை ஒரு பக்கம் 3 வரிசை, மற்றொரு பக்கம் 2 வரிசை என இருந்த இருக்கைகள் முன்புறம், பின்புறம், இடையில் என ஒரு மீட்டர் இடைவெளியுடன் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், பேருந்துகளை கிருமிநாசினியால் சுத்தம் செய்யவும், இருக்கைகள், கைப்பிடிகள் உள்ளிட்டவற்றை சானிடைசர் திரவம் கொண்டு சுத்தம் செய்யவும் ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பயணிகளுக்கு முகத்திற்கு கவசம் அணிதல், கையில் கையுறை அணிதல், போர்வைகள், குடிநீர் உள்ளிட்டவற்றை தாங்களே கொண்டு வருதல் உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments