அமெரிக்கா, ஐக்கிய அமீரகம், மலேசியாவில் இருந்த இந்தியர்கள் மீட்பு

0 681

அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்த இந்தியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றினால் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. இதன் ஒருகட்டமாக அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் இருந்து 118 பயணிகளும், அபுதாபியில் இருந்து 170 பயணிகளும் நேற்றிரவு 8.50 மணியளவில் ஹைதராபாத் ராஜீவ்காந்தி சர்வதேச விமானநிலையத்திற்கு வந்தனர்.

பயணிகளின் வருகையை முன்னிட்டு விமானநிலையம் முழுவதும் சுத்தப்படுத்தப்பட்டிருந்தன. பின்னர் அவர்கள் பல்வேறு இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் துபாயில் இருந்து 178 பயணிகளுடன் வந்த விமானமும் ஹைதராபாத் வந்தடைந்தது. இதேபோல் கோலாலம்பூரில் இருந்த வந்த விமானங்கள் கொச்சி மற்றும் சென்னை விமானநிலையங்களில் தரையிறங்கின.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments