தூய்மைப் பணியாளர்கள், மருத்துவத் துறையினருக்கு இடையூறற்ற போக்குவரத்தை உறுதிப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்

0 486

மாநிலங்களிலும், மாநிலங்களுக்கு இடையேயும் மருத்துவத்துறையினர், மருத்துவ துணைப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஆம்புலன்ஸ்களுக்கு இடையூறற்ற போக்குவரத்தை உறுதிப்படுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா, மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், மருத்துவமனைகளுக்கு ஏற்படும் சுமையை குறைக்க, தனியார் கிளினிக்குகள், நர்சிங் ஹோம்கள் அனைத்து மருத்துவ ஊழியர்களுடனும் திறக்கப்படுவதை உறுதி செய்யுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல, புலம்பெயர் தொழிலாளர் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கான சிறப்பு ரயில்களை இயக்குவதற்கும், ஆங்காங்கே சிக்கியுள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் இடம்பெயர்ந்து செல்லவும் ஒத்துழைப்பு அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புலம் பெயர் தொழிலாளர்கள் சாலை மார்க்கமாகவோ, தண்டவாளங்களிலோ கால்நடையாக சொந்த ஊர் திரும்ப அனுமதிக்க கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments