திருமழிசை சந்தையில் விற்பனை தொடக்கம்.. காய்கறிகளின் விலைகள் குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிப்பு..!

0 1920

சென்னையை அடுத்த திருமழிசையில் தற்காலிக காய்கறி சந்தை பயன்பாட்டுக்கு வந்ததைத் தொடர்ந்து காய்கறிகளின் விலைகள் குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து ஏராளமானோருக்கு கொரோனா தொற்று பரவியதால் சந்தையை மூட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. இதனைத் தொடர்ந்து திருமழிசையில் காய்கறி சந்தை நேற்று தொடங்கப்பட்டது.

திருமழிசையில் காய்கறி சந்தைக்கு 200 முதல் 250 லாரிகளில் 5 ஆயிரம் டன் அளவிற்கு காய்கறிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. சந்தை மாற்றம் காரணமாக கடந்த சில தினங்களாக காய்கறி விலைகள் கடுமையாக உயர்ந்திருந்ததாகவும், தற்போது விலை கணிசமாகக் குறைந்திருப்பதாகவும் காய்கறி வியாபாரிகள் சங்கத் தலைவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments