விஜய் சேதுபதிக்கு எதிரான கருத்துக்களை நீக்க கோரி சைபர் கிரைம் போலீசாரிடம் மனு

0 6115
நடிகர் விஜய் சேதுபதி குறித்து அவதூறு பரப்பும் வகையில் சமூக வலைத்தளங்களில் வலம் வரும் பதிவுகளை நீக்க கோரி சைபர் கிரைம் போலீசாரிடம், அவரது ரசிகர் மன்றத்தினர் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி குறித்து அவதூறு பரப்பும் வகையில் சமூக வலைத்தளங்களில் வலம் வரும் பதிவுகளை நீக்க கோரி சைபர் கிரைம் போலீசாரிடம், அவரது ரசிகர் மன்றத்தினர் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அந்த புகார் மனுவில், தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நம்ம ஊரு ஹீரோ நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி, பிரபல நகைச்சுவை நடிகர் கிரேசி மோகனின் கருத்தையே மறு பதிவு செய்ததாகவும், அவற்றை இந்து மதத்திற்கு எதிராக விஜய் சேதுபதி கூறிய கருத்து போன்று எடிட் செய்து சிலர் பரப்பி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், விஜய் சேதுபதி மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றி சமூக வலை தளத்தில் பரவும் அவதூறு கருத்துக்களை நீக்கவும், சர்ச்சைக்கு காரணமாக அமைந்த அந்த வீடியோ பதிவை நீக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments