திருவாரூரில் மர்மமான முறையில் வயலில் உயிரிழந்து கிடந்த 12ம் வகுப்பு மாணவி

0 16634
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே 12ம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் வயலில் இறந்து கிடந்த நிலையில், அவர் விஷமருந்தி உயிரிழந்திருந்ததும், பாலியல் உறவுக்கு ஆளாகியிருந்ததும் பிரேத பரிசோதனை முடிவில் தெரிய வந்துள்ளது.

நன்னிலம் அடுத்த மகிழஞ்சேரி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த வியாழக்கிழமை இரவு வழக்கம் போல் பாட்டி வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த நிலையில், மறுநாள் காலை வீட்டுக்கு பின்புறமிருந்த வயலில் இறந்து கிடந்தார்.

இதையடுத்து சிறுமியின் பிரேத பரிசோதனை முடிவில் சிறுமி விஷமருந்தி உயிரிழந்ததும், பாலியல் உறவுக்கு ஆளாகியிருந்ததும் தெரிய வந்தது.

இதனால் சிறுமியின் மரணம் தற்கொலையா, கொலையா என சந்தேகம் எழுந்துள்ளது. முன்னதாக உயிரிழந்த சிறுமி தனது உறவினர் எடுத்த குறும்படம் ஒன்றில் நடித்திருந்ததால், அந்த குழுவை சேர்ந்த யாருக்காவது சிறுமியின் மரணத்தில் தொடர்புள்ளதா?, சிறுமி பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments