சத்தீஸ்கரில் போலீசாருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 4 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை

0 480
சத்தீஸ்கரில் போலீசாருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 4 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை

சத்தீஸ்கர் மாநிலத்தில் போலீசாருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 4 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ராஜ்நந்த்கோன் மாவட்டம் மான்பூர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பர்டோனி கிராமம் அருகே போலீசார் நேற்றிரவு  நக்சலைட்டு தீவிரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு மறைந்திருந்த நக்சலைட்டுகள், போலீசாரை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதைத் தொடர்ந்து போலீசாரும் பதிலடி தாக்குதல் நடத்தினர். இதனால் இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது. இந்த சண்டையில் 4 நக்சலைட்டுகள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏ.கே. 47 ரக துப்பாக்கி உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. துப்பாக்கி சண்டையில் காவல் உதவி ஆய்வாளர் ஒருவரும் வீரமரணம் அடைந்தார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments