கெடிலா மருந்து ஆலை மூடப்பட்டது..!

0 1744

26 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அகமதாபாத்தில் உள்ள நாட்டின் மிகப்பெரிய  மருந்து உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான  கெடிலாவின் உற்பத்தி ஆலை மூடப்பட்டது.

அகமதாபாத்தின் டோல்காவில் உள்ள இந்த தொழிற்சாலையில் ஆறு நாட்களுக்கு முன்னர் 5 ஊழியர்களுக்கு தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வாரம் நடத்தப்பட்ட சோதனையில் மேலும் 21 பேருக்கு தொற்று உறுதியானதாக அகமதாபாத் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை அடுத்து ஆலையை மூடுமாறு உத்தரவிட்ட மாநகராட்சி நிர்வாகம், கெடிலாவின் 95 ஊழியர்களை நோய் கண்காணிப்பு மையத்திற்கு மாற்றியுள்ளது.

ஊரடங்கு காலத்தில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் ஹாட் ஸ்பாட்டுகளில் ஒன்றான அகமதாபாத்தில் எந்த கட்டுப்பாடும் விலக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments